உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் குடியிருப்புப் பேட்டையில் இரண்டு குப்பைத் தொட்டிகள் நேற்று முன்தினம் தீப்பிடித்து எரிந்தன. குப்பைத் தொட்டிகள் தீப்பிடிக்க காரணமானவர் என்று சந்தேகிக்கப்படும் 79 வயது முதியவர் கைது செய்யப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் போலிசார் தெரிவித்தனர். மாலை 5.10 மணி அளவில் உட்லண்ட்ஸ் ரிங் சாலையில் உள்ள புளோக் 668ல் இந்தத் தீச்சம்பவம் நிகழ்ந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையினர் தீயை அணைத்தனர். தீச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. போலிசார் விசாரணை நடத்துகின்றனர்.
தீப்பிடித்து எரிந்த குப்பைத் தொட்டிகள்; முதியவர் கைது
1 mins read

