இருக்கைவாரை அணியாதோர் மாதத் திற்கு 800 பேர்;அதிகாரிகள் எச்சரிக்கை

இருக்கைவாரை அணியாதோர் மாதத் திற்கு 800 பேர்;அதிகாரிகள் எச்சரிக்கை

1 mins read

ஒவ்வொரு மாதத்திற்கும், இருக்கைவார் அணியாத வாகனமோட்டிகள், பயணிகள் எனக் கிட்டத்தட்ட 800 பேர் அதிகாரிகளால் பிடிபடுகின்றனர். 2016ஆம் ஆண்டில் நடந்த 9,836 சம்பவங்களுடன் ஒப்பிட, கடந்தாண்டு சம்பவங்களின் எண்ணிக்கை 9,541 ஆகக் குறைந்தது. எனினும், அண்மையில் சில உயிர்க்கொல்லி விபத்துகள் நடந்ததைத் தொடர்ந்து சாலைப் பாதுகாப்பு நிபுணர்கள், இருக்கைவாரை அணிவதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். விபத்துகளில், இருக்கைவார் அணியும் பயணிகளைவிட இருக்கைவார் அணியாத பயணிகளுக்கு ஆகக் கடுமையாகக் காயமடையும் வாய்ப்பு உள்ளதாக தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.