முன்னாள் குண்டர் தலைவனுக்கு 28 ஆண்டு சிறை, 24 பிரம்படி

முன்னாள் குண்டர் தலைவனுக்கு 28 ஆண்டு சிறை, 24 பிரம்படி

2 mins read
eed31a70-3623-45da-9b16-2fe0083c1ed6
-

இளம் குண்டர் கும்பல் ஒன்றின் தலைவராக இருந்த 25 வயது விற்பனையாளர் ஒருவருக்கு 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. அவ ருக்கு 24 பிரம்படிகள் கொடுக்கும் படியும் உத்தரவிடப்பட்டது. குண்டர்கும்பல் தலைவனாக இருந்தபோது அந்த நபர் 13 வயது சிறுமி ஒருவரை பலமுறை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தினார். கோ ரோங் குவாங் என்ற அந்த நபருக்கு சார்ல்ஸ் என்ற பெயரும் உண்டு. அவர் மேல் முறையீடு செய்கிறார். கோவுக்கு பிணை அனுமதிக்கப் பட்டு இருக்கிறது என்றாலும் பிணைத் தொகை $80,000லிருந்து $100,000 ஆக உயர்த்தப்பட்டது. கோ, 12 குற்றச்சாட்டுகளின் பேரில் விசாரணை கோருகிறார்.

பாலியல் குற்றச்செயல்கள், சுவா சூ காங் சென்டரில் இருக்கும் கரவோக்கே நிலையம் ஒன்றின் படிக்கட்டிலும் சுவா சூ காங் கிர செண்டில் இருக்கும் புளோக் ஒன் றின் படிக்கட்டிலும் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. விசாரணையின்போது கோ குற்றச்சாட்டுகளை மறுத்தார். சம்பந்தப்பட்ட பெண்ணைத் தான் தொடவே இல்லை என்று அவர் வாதாடினார். அந்தப் பெண்ணுக்கு இப்போது 17 வயதாகிறது. தனக்கு எதிராக குற்றச்சாட்டு களை அந்தச் பெண் சோடித்ததாக வும் கோ குறிப்பிட்டார். சென்ற மாதம் 11 குற்றச்சாட்டுகளின் பேரில் கோவை குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

முதல் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் பேரில் கோ விடுவிக் கப்பட்டார். அந்தக் குற்றச்சாட்டு விசாரணையின்போது, பாதிக்கப் பட்ட பெண் அளித்த வாக்கு மூலம் முரண்பட்டு இருந்ததன் காரணமாக நீதிமன்றம் இவ்வாறு முடிவுசெய்தது. கோ, 2013 நவம்பருக்கும் 2014 ஜனவரி மாதத்திற்கும் இடையில் இந்தக் குற்றங்களைச் செய்தபோது அவர் நன்னடத்தை கண்காணிப் பின்கீழ் இருந்தார் என்பது நீதி மன்ற விசாரணையின்போது தெரியவந்தது. அபாயகரமான ஆயுதம் ஒன்றுடன் கலவரத்தில் ஈடுபட்டதற்காக அவர் நன்னடத் தைக் கண்காணிப்பின் கீழ் வைக் கப்பட்டிருந்தார். திருந்துவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருந்தபோதும் அதைப் பயன்படுத்திக்கொண்டு கோ திருந்தவில்லை. பதிலாக அவர் இன்னும் மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார் என்று அரசாங்கத் தரப்பு வாதிட்டது.

கோ, கவனமாக திட்டமிட்டு குற்றச்செயல்களைச் செய்திருக் கிறார். பாதிக்கப்பட்ட பெண் ஏற் கெனவே அவருடைய தந்தையின் கொடுமைகளுக்கு ஆளாகி இருந் தார். கோவும் அவரைக் கொடுமைப் படுத்தியதால் மனரீதியில் அந்தப் பெண் மிகவும் பாதிக்கப்பட்டார் என்றும் அரசாங்க துணை வழக் கறிஞர் டேவிட் கூ வாதிட்டார்.