வெஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலை யில், 2016ல் நிகழ்ந்த ஒரு சம்பவம் தொடர்பில் நேற்று நீதிமன்றத்தில் வாகன ஓட்டுநர் ஒருவர் முன் னிலையானார். அந்தச் சம்பவத்தில் சைக்கிளோட்டிகள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மூன்றாவது நபர் காயம் அடைந்தார். அலட்சியமாக வாகனத்தை ஓட்டி அதன் மூலம் ஓங் சியான், 19, என்பவருக்கும் ஆங் யீ ஃபோங், 25, என்பவருக்கும் மரணத்தை ஏற்படுத்திவிட்டதாக சகாதேவன் செங்குட்டுவன், 35, என்பவர் மீது நேற்று குற்றம் சுமத்தப்பட்டது. இந்த இருவரின் நண்பரான மார்க்கஸ் லோக் டெக் சூன், 18, என்பவருக்குக் காயத்தை ஏற் படுத்திவிட்டதாகவும் சகாதேவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சகாதேவன் இந்தியாவைச் சேர்ந்தவர். அந்த மூவரும் 2016 அக்டோபர் 27ஆம் தேதி நள்ளிரவு வாக்கில் தெலுக் பிளாங்கா ரோட்டை நோக்கி, வெஸ்ட் கோஸ்ட் நெடுஞ்சாலையில் மின் சாரத்தில் ஓடும் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார்கள்.
அப்போது அவர்கள் மீது சகா தேவன் ஓட்டிவந்த வாகனம் மோதிவிட்டதாகக் கூறப்பட்டது. சகாதேவன் சாலையை முறை யாகக் கவனித்து வாகனம் ஓட்ட தவறிவிட்டார் என்று நீதிமன்ற பத்திரங்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக விபத்து நிகழ்ந்துவிட்டதாகவும் தெரியவந்தது. இந்தச் சம்பவம் பற்றிய மரணவிசாரணை 2016 அக்டோ பரில் நடந்தது. அதில் மார்க்கஸ் சாட்சியம் அளித்தார். தாங்கள் மூவரும் தெலுக் பிளாங்காவில் இருந்த தன்னுடைய பாட்டியின் வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டி ருந்ததாகவும் அப்போது விபத்து நிகழ்ந்ததாகவும் அவர் சாட்சியத் தில் தெரிவித்தார். மரண விசாரணை அதிகாரி, அந்தச் சம்பவம் துரதிருஷ்டமான ஒன்று என்று தன் தீர்ப்பில் குறிப் பிட்டார். சகாதேவனுக்கு $10,000 பிணை அனுமதிக்கப்பட்டு இருக் கிறது. அவர் மே 9ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன் னிலையாவார்.

