5 பேர் மாண்ட விபத்துகள்: வாகன ஓட்டுநர்கள் கைது

1 mins read
30fea64e-d490-4595-89c6-a07b005ba9c6
-

கிளமெண்டி, புக்கிட் தீமா, அங் மோ கியோ ஆகியவற்றில் சென்ற வாரம் நிகழ்ந்த மூன்று சாலை உயிர் பலி விபத்துகளில் தொடர் புடைய வாகன ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அந்த விபத்துகளில் மொத்தம் ஐந்து பேர் கொல்லப்பட்டுவிட்டார் கள். அவர்களில் இளம் மாதர்கள் இருவர் அடங்குவர்.

அந்த மாதர்களில், 19 வய துடைய தேசிய பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு மாணவியான குமாரி கேத்தி ஓங் என்பவர் ஒருவர். ஏப்ரல் 19ஆம் தேதி காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட்= கிளமெண்டி ரோடு சந்திக்கும் இடத்தில் அந்த மாணவி சென்ற டாக்சி வேறொரு டாக்சியுடன் மோதி விபத்துக்குள்ளானது. ஜாலான் அனாக் புக்கிட்டும் ஜாலான் ஜூரோங் கெச்சிலும் சந்திக்கும் இடத்தில் ஒரு காரும் எஸ்எம்ஆர்டி பேருந்து ஒன்றும் விபத்துக்குள்ளானதில் காரில் இருந்த 23 வயது பெண்மணி கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் ஏப்ரல் 22ஆம் தேதி நிகழ்ந்தது. இந்தச் சம்பவங் கள் தொடர்புடைய 54 வயது டாக்சி ஓட்டுநரும் 24 வயது பெண்மணியும் மூர்க்கமாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்ததற்காக கைதாயினர். ஏப்ரல் 23ஆம் தேதி ஒரு பேருந்து, லாரி சம்பந்தப்பட்ட ஒரு விபத்தில் பாதசாரிகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இந்த விபத்து அங் மோ கியோ அவென்யூ 6ல் நிகழ்ந்தது. ஆபத்தான முறையில் வாக னத்தை ஓட்டியதாக லாரி ஓட்டுநர் கைதாகி இருக்கிறார். இந்த விபத்துகள் பற்றிய புலன்விசா ரணை தொடர்வதாக போலிஸ் அறிவித்துள்ளது.