வீவக மறுவிற்பனை எண்ணிக்கை, விலை இறக்கம்

வீவக மறுவிற்பனை எண்ணிக்கை, விலை இறக்கம்

1 mins read
6e0b22f8-36d2-4c81-a399-c713a318143f
-

கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் விற்கப்பட்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் 5,738 மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டன. இவ்வாண்டின் முதல் காலாண்டில் 4,458 மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டதாக வீவக தெரிவித்தது. மறுவிற்பனை செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 22.3 விழுக்காடு குறைந்தது. இவ்வாண்டின் முதல் காலாண்டில் வீவக மறுவிற்பனை விலை 0.8 விழுக்காடு சரிவு கண்டது. 2015ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குப் பிறகு இவ்வாண்டில் முதல் மூன்று மாதங்களில்தான் மறுவிற்பனை விலை ஆக அதிகமாகக் குறைந்துள்ளது.

மத்திய வட்டாரத்தில் உள்ள நான்கறை வீடுகளும் தோ பாயோவில் உள்ள ஐந்தறை வீடுகளும் ஆக அதிகமான சராசரி விலையைப் பதிவு செய்தன. அவற்றின் சராசரி விலை $850,000. ஜூரோங் வெஸ்ட், புக்கிட் பாத்தோக், உட்லண்ட்ஸ் ஆகிய வட்டாரங்களில் உள்ள மூவறை வீடுகள் ஆகக் குறைவான விலைக்கு விற்கப்பட்டன. இதற்கிடையே, வாடகைக்கு விடப்பட்டிருக்கும் வீவக வீடுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தனியார் வீடுகளின் விலை இவ்வாண்டின் முதல் காலாண்டில் 3.9 விழுக்காடு உயர்ந்தது.