இவ்வாண்டு இறுதிக்குள் சிங்கப்பூருக்கும் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கும் இடையே இடைநில்லா விமானச் சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தொடங்க இருக்கிறது. இந்த 19 மணி நேர விமானச் சேவை உலகிலேயே ஆக நீண்டநேர இடைநில்லா விமானச் சேவையாகும். சிங்கப்பூருக்கும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்கும் இடையே இடைநில்லா விமானச் சேவையையும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தொடங்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பயண நேரம் 15 மணி நேரத்துக்கும் அதிகமானதாக இருக்கும். இவ்விரண்டு விமானச் சேவைகளுக்கும் சிங்கப்பூரின் புதிய 350=900ULR ரக விமானங்கள் பயன்படுத்தப்படும். அவற்றில் பயணிகளுக்காக வர்த்தகப் பிரிவும் பிரிமியம் இக்கனாமி பிரிவும் வழங்கப்படும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூருக்கும் நியூயார்க்குக்கும் இடையே இடைநில்லா விமானச் சேவை
1 mins read
-

