ஓய்வுபெறும் மூன்று அமைச்சர்களைப் பாராட்டிய பிரதமர் லீ சியன் லூங்

ஓய்வுபெறும் மூன்று அமைச்சர்களைப் பாராட்டிய பிரதமர் லீ சியன் லூங்

1 mins read
3d944f86-ecaf-4e7e-809c-a6a2ee5a5bf0
-

ஓய்வுபெறும் அமைச்சர்களான திரு லிம் ஹங் கியாங், திரு லிம் சுவீ சே, டாக்டர் யாக்கூப் இப்ராஹிம் ஆகியோருக்குப் பிரியாவிடைக் கடிதங்களைப் பிரதமர் லீ சியன் லூங் அனுப்பியுள்ளார். சிங்கப்பூரின் வளர்ச்சிக்குப் பங்களித்த இந்த மூவரையும் பிரதமர் வெகுவாகப் பாராட்டி உள்ளார். இந்த மூன்றாம் தலைமுறை அமைச்சர்களில் திரு லிம் ஹங் கியாங்கைப் பிரதமருக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக தெரியும்.

தாங்கள் இருவரும் கேம் பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்று கொண்டிருந்த காலத் திலிருந்து அவரைத் தெரியும் என்று பிரதமர் குறிப்பிட்டார். வர்த்தக, தொழில் அமைச்சர் (வர்த்தகம்) திரு லிம் ஹங் கியாங்கைக் கடுமையான உழைப் பாளி என்றும் நடைமுறைக்கு ஏற்றவாறு செயல்படுபவர் என்றும் அதே சமயத்தில் மனிதநேயத்துடன் கனிவாக நடந்துகொள்பவர் என்றும் பிரதமர் லீ வர்ணித்தார்.

நெருக்கடியான தருணங்களில் நிதானத்தை அவர் கைவிடுவ தில்லை என்று குறிப்பிட்ட திரு லீ, அவரது தொலைநோக்குப் பார்வை யும் அறிவார்ந்த ஆலோசனைகளும் அமைச்சரவைக்குப் பேருதவியாக இருந்ததாகச் சொன்னார். வர்த்தக, தொழில் அமைச்சர் (வர்த்தகம்) என்கிற முறையில் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்து உற்பத்தித்துறையில் துறைசார்ந்த குழுமங்களை அவர் அமைத்ததைத் திரு லீ சுட்டினார்.