மின்னிலக்க யுகத்திற்கான அடிப் படை மற்றும் மேல்நிலை நிரலிடு தல் திறன்களை முதியோர்கள் கற்றுக்கொள்வதற்கு அதிக வசதி கள் செய்யப்படும். தகவல்தொடர்பு ஊடக மேம் பாட்டு ஆணையமும் (ஐஎம்டிஏ) தொழில்நுட்பக் கல்விக் கழகமும் நேற்று இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டதன் மூலம் அந்த வசதிகள் கிடைக்கவுள்ளன. 'அவர் தெம்பனிஸ் ஹப்' வாழ் வியல் மையத்தில் நேற்று நடை பெற்ற 'டெக்4' சமூக விழாவில் அந்த இரண்டு அமைப்புகளும் இணக்கக் குறிப்பில் கையெழுத் திட்டன. மலிவு விலையில் முதியோருக் கென உருவாக்கப்பட்ட பாடத் திட்டங்களின்கீழ், அந்த அமைப்பு கள் வகுப்புகளை நடத்தும்.
முதியோருக்கு நவீனத் தொழில்நுட்பக் கூறுகளைக் கற் பிக்கும் 'சில்வர் இன்ஃபோகாம் ஜங்ஷன்' திட்டத்தில் புதிய ஏற் பாடு அங்கம் வகிக்கும். தற்போது 30க்கும் மேற்பட்ட 'சில்வர் இன்ஃபோகாம் ஜங்ஷன்' மையங்கள் உள்ளன. அவற்றில் மாணவர்கள் சேர்ந்து தொண்டூ ழியப் பணிகளில் ஈடுபடலாம். அத்துடன், தொழில்நுட்பக் கல்விக்கழகத்தின் மின்னியல் மற் றும் தகவல் தொடர்புத் தொழில் நுட்பப் பள்ளியைச் சேர்ந்தோர், உடற்குறையுள்ளோர் சுயேட்சை யாக வாழ்வதற்கு உதவும் தொழில் நுட்பத்தை உருவாக்க உதவுவர்.
"மின்னிலக்க முறையில் தயா ரான தேசத்தை உருவாக்குவதில் பலரின் முயற்சி தேவைப்படுகிறது," என்று ஐஎம்டிஏயின் மின்னிலக்க தயார்நிலைக்குழுவைச் சேர்ந்த திருவாட்டி கோ லீ நா தெரிவித்தார். "எஸ்ஜி டெக், தொழில்நுட்பக் கல்விக் கழகம் போன்ற பங்கா ளித்துவ அமைப்புகள் எங்களது முயற்சிகளுக்கு வலுவூட்ட முன் வந்திருப்பது குறித்தும் சிங்கப்பூரர் கள் தொழில்நுட்பங்களைப் பயன் படுத்துவதற்கான நம்பிக்கை பெறு வது குறித்தும் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்," என்றும் திருவாட்டி கோ கூறினார். தொடர்பு, தகவல் அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம் சிறப்பு விருந் தினராகப் பங்கேற்ற இந்நிகழ்ச்சி யின் முதல் நாளான நேற்று 5,000க்கு மேற்பட்டோர் ஆர்வத் துடன் கலந்துகொண்டனர்..
நேற்று நடைபெற்ற 'டெக்4' சமூக விழாவில் இளையர்களுக்கான நிரலிடுதல் வகுப்பில் சிறுவர்கள் நிரலிடுவதைப் பார்வையிடுகிறார் தொடர்பு, தகவல் அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம். படம்: தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம்

