கை, கால், வாய்ப் புண் சம்பவங் கள் அண்மை காலத்தில் அதிக ரித்திருக்கிறது என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தின் தொடக்கத் திலிருந்து சுமார் 1,000 புதிய சம்பவங்கள் நடந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது. அந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டின் அதே காலக்கட்டத் துடன் ஒப்புநோக்க அதிகமாக இருப்பதாக, அமைச்சின் வாராந் திர அறிக்கை ஒன்று குறிப்பிடு கிறது. தொற்றுநோய்களைப் பற் றிய விவரங்களை அந்த அறிக்கை வெளியிடுகிறது.
இம்மாதம் 15ஆம் தேதிக்கும் 21ஆம் தேதிக்கும் இடையே, 996 புதிய கை, கால், வாய்ப் புண் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்தாண்டின் அதே காலகட்டத் தில் அந்த எண்ணிகை 761 ஆக இருந்தது. மொத்தத்தில், இவ்வாண்டின் தொடக்கம் முதல் ஏப்ரல் வரை, 12,309 பேருக்கு அந்நோய் தொற் றியுள்ளது. அத்தகைய சம்பவங்க ளின் எண்ணிக்கை கடந் தாண்டின் அதே காலகட்டத்தில் 11,016 ஆக இருந்தது.
"கை, கால், வாய்ப் புண் சம்ப வங்களின் எண்ணிக்கை, ஆண்டுக்காண்டு என்ற அடிப் படையிலும் ஆண்டு முழுமை யிலும் ஏற்ற இறக்கமாய் இருக் கிறது," என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. "அந்நோயால் பாதிக்கப்படு வோரின் எண்ணிக்கை வழக்கம் போல் மார்ச் மாதத்துக்கும் மே மாதத்துக்கும் இடையே உச்சமாக இருக்கும்," என்று அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார். 2013ஆம் ஆண்டுக்கும் கடந் தாண்டுக்கும் இடையே, ஒவ் வோர் ஆண்டின் முதல் 16 வாரங் களுக்கு சராசரியாக 8,836 சம் பவங்கள் நிகழ்கின்றன.
குழந்தைப் பராமரிப்பு நிலை யங்கள் இரண்டும் பாலர் பள்ளி கள் இரண்டும் கை, கால் வாய்ப் புண் நோய் அதிகம் பரவுகிற இடங்களாக வகைப்படுத்தப்பட் டுள்ளன. காலாங் லெஷர் பார்க்கில் உள்ள 'மைன்ட்சேம்ப்ஸ் ப்ரீஸ் கூல்', ஈஸ்ட்பாயிண்டில் உள்ள 'மை பர்ஸ்ட் ஸ்கூல்', செயிண்ட் ஜேம்ஸ் பாலர் பள்ளி, பிடோக் மெத்தடிஸ்ட் சர்ச் பாலர் பள்ளி ஆகியவை அந்த இடங்கள். காய்ச்சல், தொண்டைப் புண், வாய்ப் புண், கை, கால், பின்புறங் களில் சொறிகள் ஆகியவை அந்நோய்க்கான பொதுவான அறிகுறிகள்.

