காலத்தால் அழியாத புலம்பெயர் தமிழர்கள் வரலாறு

காலத்தால் அழியாத புலம்பெயர் தமிழர்கள் வரலாறு

2 mins read
0a2defba-a3be-4c00-9bb7-9d1ee5ab704c
-

முஹம்மது ஃபைரோஸ்

நவீன காலத்துக்கு முந்திய தென்கிழக்கு ஆசியாவில் தமிழ்மொழி, கலாசாரத்தின் தாக்கம் குறித்தும் தமிழ் நாகரிகத்திற்குத் தென்கிழக்கு ஆசிய வட்டாரத்தின் பங் களிப்பு பற்றியும் ஆராயத் தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய மரபுடைமை நிலை யத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நவீன காலத் துக்கு முந்தியதென்கிழக்கு ஆசியாவில் புலம்பெயர் தமிழர்களின் வரலாறு குறித்து சிங்கப்பூரர்களுக்கு எடுத்து ரைக்கும் நோக்கில் சிறப்புரை இடம்பெற்றது. யேல்-=சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகக் கல்லூரியின் வரலாற்றுத் துறையில் முனை வர் பட்டத்துக்குப் பிந்திய மேற்கல்வி பயிலும் முனைவர் சுரேஷ்குமார் முத்துக்குமரன் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் உரையாற்றினார். இந்தியாவின் தென்கோடி, வட இலங்கை ஆகிய பகுதி களின் தமிழ் பேசும் மக்கள், கி.மு. எனப்படும் கிறிஸ்துக்கு முந்தைய காலகட்டத்தில் திடீ ரென பெருமளவில் திரைகட லோடி திரவியம் ஈட்டும் வர்த் தகப் பிரதிநிதிகளாகப் புறப்பட் டனர். அவர்களிடையே வர்த் தகம் புரியம் திறன் இயல்பா கவே இருந்தது.

பெரும்பான்மையாக ஆண் வர்த்தகர்களாக இருந்த அவர் கள், தாங்கள் புலம்பெயர்ந்த அந்தந்த நாடுகளில் வாழ்ந்த உள்ளூர் பெண்களைத் திரு மணம் புரிந்தனர். இதன் விளைவாகவே, சமூகங்கள் ஒன்றிணைந்ததில் கால ஓட் டத்தில் சில சமூகங்களில் தமிழ் மொழிப் புழக்கம் மறைந்துவிட்டாலும் தமிழர் களின் பாரம்பரியங்களும் சமயம் தொடர்பான நடவடிக் கைகளும் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்தன என்று கூறினார் முனைவர் சுரேஷ்குமார், 29. பண்டைய உலகில் இது வரை கண்டறியப்படாத அள வில் தென் சீனக் கடலிலிருந்து எகிப்து செங்கடல் எல்லை வரையிலான கிட்டத்தட்ட 7,000 கீலோமீட்டருக்கு அப் பாற்பட்ட ஒரு வர்த்தகப் பரப் பளவில் தமிழ் வணிகச் சமூ கங்கள் பரவிச் செயல்பட்டதை தமிழ்-பிராமிய எழுத்துகளில் உள்ள தொல்லியல், கல்வெட் டியல் தகவல் காட்டுவதாகவும் அவர் சொன்னார்.

இந்நிலையில், ஆரம்ப காலத்தில் தென்கிழக்கு ஆசி யாவில் குடியேறிய தமிழ்ச் சமூகங்கள் குறித்த இவ்வுரை இலக்கிய, கல்வெட்டியல், தொல்பொருள் ஆதாரங்க ளின் உதவியுடன் விளக்க உரையாக அமைந்தது. வணிக ரீதியிலான வளர்ச்சி மட்டுமின்றி, தென் கிழக்கு ஆசிய அரசியல் பிர முகர்களுடன் ஏற்பட்ட அரச தந்திர உறவுகளாலும் திரு மண பந்தங்களாலும் தென் கிழக்கு ஆசிய வட்டாரத்தில் தமிழ்க் குடியேற்றங்கள் ஊக் கம் பெற்றன. ஆங்கிலத்தில் இடம்பெற்ற இவ்வுரையை ஆர்வத்துடன் கேட்க தமிழர்கள், சீனர்கள், வெள்ளை இனத்தவர்கள் என கிட்டத்தட்ட 50 பேர் வந்திருந்தனர். நவீன காலத்துக்கு முந்திய தென்கிழக்கு ஆசியா வில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகங்களின் வரலாறு பற்றி ஆழமாக, தகுந்த ஆதாரங் களுடன் முனைவர் சுரேஷ் குமார் அற்புதமாக விளக்கி னார் என்று தெரிவித்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் களில் ஒருவரான நிதி மேலாளரான 53 வயது திரு சுப்பையா லெட்சுமணன்.

முனைவர் சுரேஷ்குமார் முத்துக்குமரன். படம்: இந்திய மரபுடைமை நிலையம்