நாளை மறுநாள் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இஸ்தானா வளாகம் காலை 8.30 மணியிலிருந்து மாலை 6 மணி வரை பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும். பாய லேபார் மெத்தடிஸ்ட் தொடக்கப் பள்ளி, என்டியுசி இளையர் இசைக் குழு, ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றின் இசைப் படைப்புகள், மக்கள் கழகத்தின் நடனம், வாழ்நாள் கற்றல் மன்றத்தின் நடவடிக்கைக் கூடங் கள் போன்றவை அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் சில.
சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகத்தின் ஊர்வன காட்சி, சிங்டெல் நிறுவனத்தின் பலூன் சிற்பக்காட்சி, கோஸ்மோ புரோஃப் நிறுவனத்தின் முக ஓவியம் ஆகியவற்றுடன் பல விளையாட்டுக் கூடங்களும் பார்வையாளர்களைப் பரவசப் படுத்தும். அதிபர் ஹலிமா யாக்கோப்பும் வருகை தந்து அங்கு படைக்கப்படும் சில நிகழ்ச்சிகளைப் பார்வையிடுவார். இஸ்தானாவுக்குள் நுழைய சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தர வாசிகளுக்கும் கட்டணமில்லை. மற்ற அனைத்து வருகையா ளர்களும் $2 கட்டணம் செலுத்த வேண்டும்.

