சக்கர நாற்காலியைப் பயன்படுத் தும் முதியோர் வீடமைப்பு வளர்ச் சிக் கழக (வீவக) வீடுகளில் வசிப் போராக இருந்தால், அவர்கள் இவ்வாண்டின் பிற்பாதியில், தங் கள் வீட்டுக்கு வெளியே சரிவு மேடையைக் காண்பார்கள். அத்தகையோர், தங்களது வீடு களுக்குள்ளும் வெளியேயும் செல் வதற்கு அந்தச் சரிவுமேடை மேலும் சுலபமாக்கும். சரிவுமேடைகள் நிரந்தரமாக அல்லது மடக்கி ஒருபுறம் வைக்கப் படும் விதத்தில் அமைக்கப்படலாம்.
அவற்றுக்கான விலை விவரங் கள் இன்னும் உறுதி செய்யப்பட வில்லை. ஆயினும் அரசாங்கம், 95 விழுக்காடு வரையிலான கட்ட ணத்தை ஏற்றுக்கொள்ளும். முன்னதாக, வாசலில் ஒரே படி யைக்கொண்ட வீடுகளுக்கு மட் டும், சரிவுமேடை வைப்பதற்கு விலைக் கழிவுகள் கொடுக்கப்படும்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத் தின், துடிப்புமிக்க மூத்தோருக்கான மேம்பாட்டுத் திட்டத்தின்படி விலைக்கழிவுகள் வழங்கப்படும். தேசிய வளர்ச்சி அமைச்சரும், இரண்டாம் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், சரிவுமேடை குறித்து நேற்று அறிவித்தார்.
"ஒரே படியைக் கொண்டுள்ள வீட்டு வாசல்களுக்கான தீர்வு தற்போது உள்ளது. ஆனால், பல படிகளைக்கொண்ட வாசல்களைக் கடந்து செல்ல வேண்டி உள்ளோ ருக்கு நிலைமை இன்னும் சிரம மாய் இருக்கிறது. ஏனெனில், வீடுகளுக்கு முன்னே இருக்கும் நடைபாதையில் சரிவுமேடையை அமைக்க போதிய இடம் இல்லாமல் இருக்கலாம்," என்று திரு வோங் தெரிவித்தார்.
இத்தகைய இடங்களுக்கான சரிவுமேடை எளிதில் கடைகளில் கிடைக்காததால், புதிய வடிவில் அவற்றைத் தயாரிக்க வீவக, பொறியாளர்களுடன் இணைந்து செயல்பட்டதாக அவர் கூறினார். தெம்பனிஸ் குழுத்தொகுதி யின் தெம்பனிஸ்-சங்காட் பிரிவில் திரு வோங், செய்தியாளர்களிடம் அவ்வாறு தெரிவித்தார். தெம் பனிஸ் குழுத் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் டெஸ்மண்ட் சூ அவரை உபசரித்தார். மூலையில் அமைந்துள்ள வீடு கள் அல்லது வாசலுக்கு முன் போதிய இடமுள்ள நடைபாதை கொண்ட வீடுகளுக்கு, மடக்கி வைக்கக்கூடிய சரிவுமேடை பொருந்தும். நடைபாதையில் குறைந்தது 1.2 மீட்டர் இடம் கொண்டுள்ள வீடுக ளுக்கு பிரத்தியேகமாகச் செய்யப் படும் சரிவுமேடை நிரந்தரமாகப் பொருத்தப்படலாம்.
மடக்கி வைக்கக்கூடிய சரிவு மேடையின் விலை $700 அல்லது அதற்கும் குறைவாக இருக்கும். நிரந்தரமாகப் பொருத்தப்படக் கூடிய சரிவுமேடையின் விலை, கிட்டத்தட்ட $1,600. தற்போது பல படிகளைக்கொண்ட கிட்டத் தட்ட 170,000 வீடுகள் உள்ளன. சரிவுமேடை, கைப்பிடி உள் ளிட்ட, வயதானோருக்கு வசதி யான அம்சங்கள் பலவற்றை 'ஈஸ்' திட்டம், விலைக்கழிவுடன் வழங்கு கிறது. ஜூலை 2012ல் திட்டம் தொடங்கியதிலிருந்து கடந்த மாதம் வரை, கிட்டத்தட்ட 163,000 வீடுகள் அதற்கு விண்ணப்பித்தி ருப்பதாக வீவக தெரிவித்துள் ளது.
சக்கர நாற்காலியில் அமர்ந்துள்ள தனது 71 வயது தாயாரைச் சுலபமாக சரிவு மேடை மூலம் வீட்டுக்குள் தள்ளிச் செல்கிறார் அவரது மகள் டியானா நோரஹ்மான். படம்: சாவ் பாவ்

