தெருவில் சுற்றித்திரியும் விலங் குகளைப் பிடிப்பதற்கு நச்சுப் பொருட்களைத் தான் பயன்படுத் துவதில்லை என்று வேளாண்-உணவு கால்நடை மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. யீஷூனில் தெருநாய் ஒன் றுக்கு நஞ்சு கலந்த உணவு கொடுக்கப்பட்டது குறித்து ஆணையம் பதிலளித்துள்ளது. 'யீஷூன் 326 டெபி கேட்' என்ற விலங்கு நல ஆர்வலர் குழுவின் இணையப் பக்கத்தில் அச்சம்ப வம் பற்றிய தகவல் பதிவேற்றம் செய்யப்பட்டது. நாய் ஒன்றின் சடலத்தைக் காட்டும் ஒரு படம் அந்தப் பதி வில் இணைக்கப்பட்டது. யீஷூன் ரிவர்வோக்கைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள், வெள்ளி நிற வேன் ஒன்று அடிக்கடி அந்தப் பகுதியில் சுற்றிவருவதைப் பார்த் ததாக ஃபேஸ்புக் பக்கத்தில் கூறப்படுகிறது.
தெருநாய்களின் கூட்டம் அடிக்கடி காணப்படும் திடலில், கையில் பிளாஸ்டிக் பையுடன் மூன்று ஆடவர்கள் காணப்பட்ட தாகக் கூறப்படுகிறது. சற்று நேரத்திற்குப் பிறகு, நாய் உணவு கொண்டுள்ள பிளா ஸ்டிக் பையும் வெள்ளைத் தூள் தென்பட்ட இரண்டு கையுறை களும் காணப்பட்டதாக அந்த ஃபேஸ்புக் பக்கம் தெரிவித்தது. வேளாண்-உணவு கால்நடை மருத்துவ ஆணையம் அந்த மூன்று ஆடவர்களை அனுப்பிய தாக அது கூறியது.
"ஆணையத்தைத் அழைத்த போது, சைக்கிளோட்டிகளைத் தெருநாய்கள் துரத்தும் பிரச்சி னையைத் தீர்த்துவைக்க குத்த கையாளர்களை அமர்த்தியதாக ஆணையம் ஒத்துக்கொண்டது. ஆனால் நாய்களுக்கு நஞ்சு கொடுக்கப்பட்டதை அவர்கள் மறுத்தனர்," என்று 'யீஷூன் 326 டெபி கேட்' தெரிவித்தது. ஆணையம், தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் பதிலளித்தது. தெருநாய்களைச் சமாளிப்பது குறித்து அனைத்து குத்தகை யாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் நடப்பில் இருப்ப தாகத் தெரிவித்தது. விலங்கு வதைத் தடுப்புச் சங் கமும் தானும் அந்த விதிமுறை களை வகுத்திருப்பதாக ஆணை யம் கூறியது.
திடலில் மடிந்துகிடக்கும் தெருநாய். படம்: FACEBOOK/LOUIS NG KOK KWANG

