கொரியத் தீபகற்பத்தில் அமைதி யான, முழுமையான, மாற்றமுடியாத அணுவாயுதக்களைவு நிகழ்வ தற்கு ஆசியான் அமைப்பு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார். வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான வர லாற்றுச் சிறப்புமிக்க உச்சநிலைக் கூட்டம் நடந்த மறுநாளான நேற்று பேசிய ஆசியான் அமைப்பின் தலைவருமான திரு லீ, கொரியத் தீபகற்பத்தில் அண்மையில் நிகழ்ந் துவரும் ஆக்கபூர்வமான மேம்பாடு களை ஆசியான் வரவேற்கிறது என்றார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற இரு கொரியாக்களுக்கிடையிலான உச்சநிலைக்கூட்டம் முதல், மார்ச் மாதத்தில் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் சீனப் பய ணம், விரைவில் அமெரிக்க அதி பர் டோனல்ட் டிரம்பைச் சந்திக்க திரு கிம் தெரிவித்த சம்மதம் ஆகியவற்றை பிரதமர் நேற்று சுட் டினார்.
"நடந்து முடிந்த கொரிய உச்ச நிலைக் கூட்டம் அந்த வட்டாரத்தில் நிலவிய பதற்றத்தைத் குறைத்து, இரு கொரியாக்களுக்கிடையிலான உறவை மேம்படுத்தியுள்ளது. அது கொரியத் தீபகற்பத்திலும் இந்த வட்டாரத்திலும் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் பங்களிக் கும்," என்று திரு லீ, சிங்கப்பூர் ஏற்று நடத்தும் 32வது ஆசியான் உச்சநிலைக் கூட்டத்துக்குப் பின் பேசினார். கூட்டத்தின்போது, ஆசியான் தலைவர்கள் மியன்மாரின் ரக் கைன் மாநிலத்தில் நிலவும் மனிதா பிமான நெருக்கடி பற்றியும் தென் சீனக் கடலின் பாதுகாப்பு நிலவரம் பற்றியும் விவாதித்தார்கள்.
ரக்கைன் மாநிலத்தின் தற் போதைய நிலவரம் பற்றி மியன்மார் தனது சக ஆசியான் உறுப்பினர் களுக்கு விளக்கமளித்தது என்று கூறிய திரு லீ, இந்த நிலவரம் அனைத்து ஆசியான் நாடுகளுக் கும் கவலை தரும் அம்சமாகத் திகழ்கிறது என்றார்.
ரக்கைன் மாநிலத்தில் நிகழ்ந்த ராணுவ ஒடுக்குமுறைக்குப் பிறகு பாதிக்கப்பட்டுள்ள 700,000க்கு மேற்பட்ட மக்களின் அவலம் பற் றிய ஆசியானின் நிலைப்பாட்டை எடுத்துரைத்த பிரதமர் லீ, "அங்கு அமைக்கப்பட்டுள்ள மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் மேலாண் மைக்கான ஆசியான் ஒருங்கி ணைப்பு நிலையம், பாதிக்கப்பட்ட ரக்கைன் மாநில மக்களுக்கு உதவி வருகிறது," என்று கூறி னார்.
"பாதிக்கப்பட்ட சமூகங்கள் தங்கள் வாழ்வைச் சரிசெய்து கொள்வதற்கான நீண்டகால தீர்வு காண பணியாற்றும் அனைத்துத் தரப்புகளுக்கும் ஆதரவளிக்க ஆசியான் தயாராக உள்ளது," என்றும் திரு லீ வலியுறுத்தினார். சிங்கப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற கூட்டத்தின் முடிவு பற்றி குறிப்பிட்ட பிரதமர் லீ, "மொத்தத்தில், சிங்கப்பூர் ஆசியான் தலைமைத்துவத்தின் முதற்கட்டமாக நம்பிக்கையளிக் கும் கூட்டம் நடைபெற்றது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்," என்றார்.

