புத்துயிரூட்டும் புதிய தலைமுறை

புத்துயிரூட்டும் புதிய தலைமுறை

2 mins read

தொகுப்பு:

ப.பாலசுப்பிரமணியம்

முஹம்மது ஃபைரோஸ்

எஸ்.வெங்கடேஷ்வரன்

மே ஒன்றாம் தேதி முதல் அமைச்சரவையில் 4ஆம் தலைமுறை அமைச்சர்களின், அதாவது சிறிய வயது அமைச்சர்களின் சீரிய நிர்வாகம் தொடங்க உள்ளது. பிரதமர் லீ சியன் லூங் கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவையை பெரிய அளவில் மாற்றியமைத்தார். அதில் அண்மைய ஆண்டுகளில் காணாத அளவு மாற்றங்கள் செய்யப்பட்டபோதும் அவை பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவை என்பது அரசியல் ஆர்வலர்களின் கணிப்பு. முக்கியமாக 4ஆம் தலைமுறை அமைச்சர்களுக்கு அதிகப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அமைச்சுகளுக்கு அதாவது மொத்தம் 16 அமைச்சுகளில் 10க்கு அவர்கள் தலைமை வகிப்பார்கள்.

1950களில் பிறந்த அமைச்சர்கள் படிப்படியாக 1960களிலும் 70களிலும் பிறந்த அமைச்சர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்து வருகின்றனர். அந்த வகையில் புதிய தலைமைத்துவத்திற்கு வழிவிடும் பிரதமர் லீ அடுத்த கட்டத்துக்குத் தேவையான மாற்றங்களை தகுந்த நேரத்தில் செய்துள்ளார். தற்போது மூத்த துணை அமைச்சராக இருக்கும் குமாரி இந்திராணி ராஜா, 55, பிரதமர் அலுவலகத்தில் முழு அமைச்சராகப் பொறுப்பேற்பார்.

அதோடு, நிதி, கல்வி இரண்டாம் அமைச்சராகவும் அவர் பணியாற்றுவார். கல்வி அமைச்சரான ஓங் யி காங், 48, அந்த அமைச்சுக்கு முழுப் பொறுப்பேற்பார். சான் சுன் சிங், 48, வர்த்தக தொழில் அமைச்சுக்கும் ஜோசஃபின் டியோ, 49, மனிதவள அமைச்சுக்கும் எஸ் ஈஸ்வரன், 55, தொடர்பு தகவல் அமைச்சுக்கும் முழுப் பொறுப்புகளை ஏற்கிறார்கள். திரு ஈஸ்வரன், வர்த்தக தொழில் அமைச்சில் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சராகவும் செயலாற்றுவார். இந்த அமைச்சரவை மாற்றங்கள் குறித்து பொது மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தது தமிழ் முரசு.

முழு விவரம்: epaper.tamilmurasu.com.sg