புதிய சமிக்ஞை முறை

புதிய சமிக்ஞை முறை

1 mins read

புதிய சமிக்ஞை முறையின் முதலாவது முழு நாள் சோதனை யைப் பார்வையிட நேற்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானுடன் வந்திருந்தார் எஸ்எம்ஆர்டியின் புதிய தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்கவிருக்கும் திரு நியோ கியன் ஹோங். கிழக்கு-மேற்கு வழித்தடத்தில் செயல்முறை நேரத்தின் போது மேற்கொள்ளப்படும் இந்தச் சோதனை மே மாதம் 27ஆம் தேதி வரை ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறும்.

அமைச்சர் கோ, திரு நியோ, எஸ்எம்ஆர்டி தலைவர் சியா மூன் மிங் ஆகியோருடன் நிலப் போக்குவரத்து ஆணையம், எஸ்எம்ஆர்டி ஆகியவற்றின் அதிகாரிகளும் செயல்முறை விவகாரங்கள் பற்றிய கருத்துகளைச் சேகரிக்க உடன் இருந்ததாக எஸ்எம்ஆர்டி ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.