மோட்டார் சைக்கிளோட்டி கள் இருவர், பின்னி ருக்கை பயணி ஒருவர் என மூவர் நேற்று முன் தினம் தெம்பனிஸ் விரைவுச்சாலையில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்தனர். சிலேத்தார் விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் தெம்பனிஸ் விரைவுச்சாலையில், பொங்கோல் வெளிச்சா லைக்குப் பிறகு, ஒரு லாரி, ஒரு கார், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட விபத்து பற்றி தங்களுக்கு சனிக்கிழமை மாலை 5.53க்கு தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது.
விரைவுச்சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி சறுக்கி, இரு தடங்களை மறைத்துக்கொண்டு நின்றிருந்த சமயத்தில் அந்த வழியே வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் அதன் மீது மோதின. அந்த மோதலில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் தூக்கி வீசப்பட்டதை சமூக ஊடகங்களில் பரவிய காணொளிகள் காட்டின.
அதில் 38, 42 வயதுகளில் உள்ள ஆடவர்கள் இருவ ரும் 40 வயது பின்னிருக்கை பயணியான மாது ஒருவரும் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

