நற்பணிப் பேரவையின் மெதுவோட்டத்தில் 350 பேர் பங்கேற்பு

நற்பணிப் பேரவையின் மெதுவோட்டத்தில் 350 பேர் பங்கேற்பு

30 Apr 2018 - 8:40 am

1 mins read

எஸ்.வெங்கடேஷ்வரன்

விளையாட்டுகளில் ஈடுபடுவதால் நமது உடல் ஆரோக்கியமும் மன நலமும் மேம்படுவதுடன் சமூக அளவிலும் குடியிருப்பாளர்களி டையே உறவைப் பலப்படுத்தும். இதை நோக்கமாகக் கொண் டும் மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வும் மக்கள் கழக நற்பணிப் பேர வையின் இளையர் அணி நேற்றுக் காலை ஐந்து கிலோமீட்டர் தூர மெதுவோட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. பொங்கோல் வாட்டர்வே பூங்கா வில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 350 பேர் கலந்து கொண்டனர்.

முன்னாள் துணை அமைச்சரும் பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பின ரும் தீவிர உடற்பயிற்சி ஆர்வலரு மான திரு டியோ செர் லக் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் பங் கேற்று ஓட்டத்திலும் கலந்து கொண்டார். இளையர் முதல் முதியவர் வரை, இந்தியர்கள் மட்டுமல்லாமல் மற்ற இனத்தவர்களும் இந்நிகழ்ச்சி யில் உற்சாகத்துடன் பங்கேற்றார்கள்.

"சிங்கப்பூரில் 17ல் ஒருவர் மனஉளைச்சல் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள். மனநலப் பிரச்சினைகள் நம் இந்திய சமூகத் தில் அதிகரிக்கிறது. மனநிலை மாறும் அறிகுறிகள் தென்படும் போது உடனே உதவியை நாட வேண்டும்," என்றார் மனநலக் கழகத்தின் மூத்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஜெயராமன் ஹரி ராம், 46.

ஓட்டத்தில் பங்கேற்றோரில் பலர் இதுபோன்ற சமூக நிகழ்ச்சிகள் உடற்பயிற்சி செய்ய பெரும் அளவில் தங்களுக்கு ஊக்கமளிக்கிறது என்றனர். படம்: நற்பணிப் பேரவை