உட்லண்ட்ஸ் நகரில் 1983ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட உட் லண்ட்ஸ் நகர் பூங்கா பின்னாளில் அங்கு இடம்பெற்ற போதைப் பொருள், பாலியல் சார்ந்த நடவடிக் கைகளால் அதன் மதிப்பை இழந்தது. இப்போது 22 மாத மறுசீரமைப் புப் பணிகளுக்குப் பிறகு நேற்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்ட இந்தப் பூங்காவின் பெயரும் மார்சி லிங் பூங்கா என்று மாற்றப்பட்டுள்ளது.
மேலும் உள்ளூர் மக்களைக் கவரும் அதிக விளையாட்டு வசதிகள், உடற்பயிற்சி வசதிகள் ஆகியவற்றுடன் இயற்கையைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பு கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வருகையாளர்களிடம் பிரபல மாக இருந்த பார்க்கும் கோபுரம், சீன பாரம்பரிய ஓய்வுக் கூடங்கள், கற்பாலம் ஆகியவை அழிக்கப்படா மல் பாதுகாக்கப்பட்டுள்ளன.
பூங்காவின் மேற்குப் பகுதியில் உள்ள சதுப்புநிலப் பகுதியில் அந்தப் பகுதி பற்றிய தகவல் பல கையும் வைக்கப்பட்டுள்ளது. புதிய பெயருடன் புதிய வசதிக ளைப் பெற்றுள்ள மார்சிலிங் பூங் காவுக்கு பொதுமக்கள் பழையபடி திரும்புவார்கள் என்று சம்பந்தப் பட்ட அமைப்புகள் நம்பிக்கை தெரிவித்தன. நேற்றைய நிகழ்ச் சிக்கு சுமார் 800 பேர் பங்கேற்று பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட் டனர்.
புதிய மார்சிலிங் பூங்காவில் மேம்பட்ட விளக்கொளி, புதிய நடைபாதை, உடலுறுதிக் கூடம், வண்ணத்துப் பூச்சி வடிவத்திலான விளையாட்டு மைதானம் போன்றவை உள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

