சிங்கப்பூர் வான்வெளியில் பறக்கும் ஆளில்லா வானூர்திகள், விமானங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட, அவற்றின் பயன்பாடு தொடர்பான சட்டத்தை மேம் படுத்த சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் பரிந்து ரைத்துள்ளது. இணையப் பயிற்சித் திட்ட அறிமுகம், முன்னோட்ட உரிமத் திட்டம், 25 கிலோகிராமுக்கு மேலாக எடையுள்ள ஆளில்லா வானூர்திகளைப் பறக்கவிடுவோருக்குக் கூடுதல் நிபந்தனைகள் போன்றவை ஆணையம் பரிந்துரைக்கும் ஐந்து மாற்றங்களில் உள்ளடங்கும். ஆளில்லா வானூர்திக்கான பகுதியளவான அல்லது முழுமையான சான்றளிப்பு, வானூர்தியை நடத்தி நிர்வகிக்கும் அமைப்புக்கான சான்றளிப்பு ஆகியவை இந்த நிபந்தனைகளில் உள்ளடங்கலாம். பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துகளை நாடுவதாக ஆணையம் நேற்று தெரிவித்தது. பொதுமக்கள் ரீச் இணையத் தளத்தின்மூலம் மே மாதம் 31ஆம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம். தற்போது, ஆளில்லா வானூர் திகளைப் பறக்கவிடுவோர், நோக்கம், வானூர்தியின் எடை, பறக்க விடப்படும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில், ஆணையத்திட மிருந்து அனுமதி பெற விண்ணப் பம் செய்யவேண்டும். ஆளில்லா வானூர்தி நடவடிக் கைகளின் துரித வளர்ச்சியால் பயன்பாட்டாளர்கள், பொருளியல் இரண்டுக்கும் நன்மை ஏற்பட்டாலும், விமானத்துறைக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும், குறிப்பாக சிங்கப்பூரின் நகரமயச் சூழ லில், ஆபத்து நேரக்கூடிய வாய்ப்புண்டு என ஆணையத்தின் தலைமை இயக்குநர் திரு கெவின் ஷம் கூறினார்.
ஆளில்லா வானூர்தி பயன்பாட்டில் பொதுமக்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்தல்
1 mins read
-

