அடிவயிறு தொடர்பான பிரச்சி னைக்காக சிகிச்சைபெறச் சென்ற 23 வயது மாணவியை மானபங்கப் படுத்தியதாகவும் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும் மருத்துவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கின் முதல் நாள் விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. சம்பவத்தின் தொடர்பில் மாணவி, அவரது தாயார் அளித்த வாக்குமூலத்தை அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் ஷர்மிளா ஸ்ரீபதி ஷனாஸ் நேற்று நீதிமன்றத் தில் தெரிவித்தார். அடிவயிறு சார்ந்த பிரச்சினைக்காக ஒரு மாணவி 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் தேதி பிடோக் மருந்தகத்தில் மருத்துவர் வீ டியோங் பூவிடம் சிகிச்சைக்காக சென்றார்.
பரிசோதனையின்போது மருத்துவர் அந்த மாணவியின் அந்தரங்க பாகங்களைத் தொட்ட தாகக் கூறப்பட்டது. அதனால் சங்கடமாக உணர்ந்தாலும் மருத் துவர் மீதிருந்த நம்பிக்கையால் அது பரிசோதனையின் அங்கமாக இருக்கக்கூடுமென்று மாணவி கருதினார் என்று சொல்லப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் மாதம் இரவு சுமார் 11.30 மணியளவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், பிறப்புறுப்பில் அரிப்பு போன்ற பிரச் சினைகளுக்காக சிகிச்சை பெறச் சென்ற அந்த மாணவியிடம் பரி சோதனை என்ற பெயரில் மருத்துவர் வன்புணர்வில் ஈடுபட்டதாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
வீடு திரும்பிய அந்த மாணவி மருந்தகத்தில் நிகழ்ந்தவற்றைத் தாயாரிடம் கூறியதால் மருத்துவர் மீது போலிசில் புகார் செய்யப்பட்ட தாகச் சொல்லப்பட்டது. அந்த மாணவியிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது 26 வயதாகும் அந்தப் பெண் மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் இருந்து சாட்சியம் அளித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. தன் மீதான குற்றச்சாட்டுகளை 67 வயதாகும் மருத்துவர் வீ (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) நேற்று நீதிமன்றத்தில் மறுத்தார்.

