'பூமலையில் மரம் சாய்ந்து பெண் மாண்டது துயரமான விபத்து'

'பூமலையில் மரம் சாய்ந்து பெண் மாண்டது துயரமான விபத்து'

2 mins read

இந்திய நாட்டவரான 38 வயது ராதிகா அங்காரா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி பூமலையில் உள்ள ஷா ஃபவுண்டேஷன் சிம்ஃபொனி மேடையில் இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தபோது 40 மீ. உயர மரம் ஒன்று விழுந்ததில் அதனடியில் சிக்கி மாண்டது ஒரு துயரமான விபத்து என மரண விசாரணை அதிகாரி மார்வின் பே நேற்று கூறினார். நிலத்துக்கு மேலே இரண்டு அடி உயரத்தில் முறிந்து விழுந்த 270 ஆண்டு பழைய தெம்புசு மரம் உட்புறத்தில் 70% அழுகி இருந்ததாகவும் அது வெளிப்புறத் தோற்றத்தில் இருந்து கண்டுபிடிக்க இயலாதது எனவும் மர பராமரிப்பு நிபுணர் சென்ற ஜூலையில் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

பூமலையின் துணை இயக்குநரான திரு இளங்கோ வேலாயுதம், "அந்த மரம் அழுகவும் இல்லை, அதில் உட்குழியும் இல்லை. மாறாக, மரத்தின் ஒழுங்கற்ற வளர்ச்சியினால் அதில் 'துளை' போன்ற அமைப்பு ஏற்பட்டது," என்றார். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இருந்த அந்த தெம்புசு மரம் ஆண்டுக்கு இருமுறை, அதாவது மற்ற மரங்களைக் காட்டிலும் அடிக்கடி, பரிசோதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. 'சாலைகளில் சட்டவிரோதமாக மின் ஸ்கூட்டர் ஓட்டிய 225 பேர் சிக்கினர்' சட்டவிரோதமாக சாலைகளில் தனிநபர் நடமாட்டக் கருவிகளைப் பயன்படுத்திய 225 பேர் இவ்வாண்டு பிடிபட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

வாகனங்கள் அனைத்தும் மின்- ஸ்கூட்டர்கள் என்றும் அவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்ட ஆணையம் 870 அமலாக்க நடவடிக்கைகளைத் தீவு முழுவதும் மேற்கொண்டதாக ஆணையத்தின் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிநபர் நடமாட்டக் கருவிகளைக் கவனமின்றி ஓட்டுபவர்கள் அவர்களுக்கும் சாலையைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்கும் அச்சுறுத்தலாக விளங்குவதால் அதனை ஆணையம் கடுமையானதாக எடுத்துக்கொள்வதாகக் குறிப்பிட்டது. தனிநபர் நடமாட்டக் கருவிகளை சாலையில் ஓட்டிச் செல்வது குற்றம் என்று ஆணையம் குறிப்பிட்டது. நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், முதல்முறை அத்தகைய குற்றம் புரிபவர்களுக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் $2,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம். மீண்டும் அத்தகைய குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு ஆறு மாதங்கள் வரை சிறத்தண்டனையும் $5,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.