சாலையைக் கடப்பதில் தகராறு; நான்கு மின்-ஸ்கூட்டர் ஓட்டிகளுக்குச் சிறை

சாலையைக் கடப்பதில் தகராறு; நான்கு மின்-ஸ்கூட்டர் ஓட்டிகளுக்குச் சிறை

1 mins read

பீஷான் பார்க் 1ல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 45 வயதான ரோமன் பாரோஸ் கிரிஃபித்ஸ் எனும் ஆடவர், அவரது மனைவி ஆகியோரைத் தாக்கியதற்காக மின்- ஸ்கூட்டர் ஓட்டிச்சென்ற இங் இயோ டிம், 40, டான் வீ ஹவ், 34, தாமஸ் லியோங் சின் க்வாங், 37, டே வோயி செய்ன், 28, ஆகிய நால்வருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சாலையைக் கடப்பதன் தொடர்பில் ஏற்பட்ட தகறாரில் திரு கிரிஃபித்ஸை தாக்கியதோடு, தன் நண்பர்களுடன் சேர்ந்து அடிதடியில் இறங்கினார் இங். திரு கிரிஃபித்ஸை தாக்கவேண்டாமென்று தடுத்த அவரது மனைவியின் காலில் டான் உதைத்ததில் அந்தப் பெண் கீழே விழுந்தார்.

இந்தச் சம்பவத்தின் தொடர்பில் அர்ஜென்டினா நாட்டவரான கிரிஃபித்ஸ் போலிசில் புகார் செய்தார். சம்பவ இடத்தில் விட்டுச்சென்ற தம்முடைய கைபேசிக்கு டான் அழைத்ததை அடுத்து போலிசார் டான், அவரது நண்பர்களை அடையாளம் கண்டு கைது செய்தனர். சிங்கப்பூரர்களான இங், தாமஸுக்கு ஒரு வாரச் சிறைத் தண்டனையும் டேக்கு இரண்டு நாட்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. மலேசியரான டானுக்கு இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.