6 மாதங்களுக்கு நிலையான வர்த்தக வளர்ச்சி

6 மாதங்களுக்கு நிலையான வர்த்தக வளர்ச்சி

2 mins read

சேவை, உற்பத்தித் துறை வர்த் தகம் ஆகியன பல நிறுவனங்களில் அடுத்த ஆறு மாதங்களுக்கு ஏறு முகமாகவே இருக்கும் என்றும் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடு கையில் இரு தொழில்துறைகளும் மேம்பட்டு இருப்பதாகவும் கருத் துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இவ்வாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான வர்த்தக எதிர்பார்ப்புகள் பற்றிய கருத்துக் கணிப்பு நேற்று வெளியானது. உற்பத்தித் துறைக்கான தக வல்களை பொருளியல் வளர்ச்சிக் கழகமும் சேவைத் துறைக்கான அறிக்கையை புள்ளிவிவரத் துறை யும் வழங்கின.

உற்பத்தித் துறையில் 13% நிறுவனங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு தங்களது வர்த்தக நிலை சிறப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளன. ஆனால் இதற்கு முந்தைய காலாண்டுக்கான கருத்துக் கணிப்பின்போது ஒரு விழுக்காட்டு நிறுவனங்கள் மட்டுமே இத்தகைய கருத்தை வெளியிட்டிருந்தன. இவ்வாண்டின் முதல் காலாண்டைவிட அடுத்த ஆறு மாதங்களுக்கு சிறந்த வர்த்தகத்தை எதிர்பார்ப்பதாக அனைத்துப் பகுதிகளிலும் உற் பத்தித் துறை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

ஆனால், நான்கு விழுக்காட்டு உற்பத்தித் துறை நிறுவனங்கள் இவ்வாண்டின் முதல் காலாண்டை விட குறைவான ஊழியர்களையே இரண்டாம் காலாண்டில் பணிக்கு அமர்த்த இருப்பதாகத் தெரிவித்து உள்ளன. சேவைத் துறையைப் பொருத்த வரை 8% நிறுவனங்கள் மிகவும் மேம்பட்ட வர்த்தக நிலைகளை அடுத்த ஆறு மாதங்களுக்கு எதிர்பார்க்கின்றன. 17% நிறுவனங்கள் நல்ல வர்த்தக சூழலை எதிர்பார்க்கும் நிலையில் 9% நிறுவனங்கள் மந்தமான வளர்ச்சியை எதிர்பார்க்கின்றன. நிதி மற்றும் காப்புறுதி, மொத்த வர்த்தகம், சொத்துச் சந்தை தொழில்துறைகள் மேம்பட்ட வர்த் தக நிலைகளை எதிர்நோக்கு கின்றன. சில்லறை வர்த்தகம், தங்குமிடம், உணவு, குடிபானத் துறை ஆகியவற்றின் வர்த்தக வளர்ச்சியானது கடந்த ஆறு மாதங்களைவிடக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.