சிங்கப்பூர் பொருளியல் கடந்த ஆண்டில் 3.6% வளர்ச்சியை எட்டிய நிலை யில், இதே உந்துசக்தி யுடன் நாம் தொடர்ந்து செயல்படும் பட்சத்தில் இவ்வாண்டும் ஆரோக்கிய மான பொருளியல் வளர்ச் சியை எதிர்பார்க்கலாம் என்று பிரதமர் லீ சியன் லூங் தமது மே தினச் செய்தியில் தெரிவித்துள் ளார்.
கடந்த ஏழாண்டுகளில் 2017ஆம் ஆண்டில்தான் உற்பத்தித் திறன் வளர்ச்சி உச்சத்தை எட்டியது என்றும் கூடுதல் சம்பளத்துடன்கூடிய வேலைகள் உள்ளிட்ட அதிகமான வேலைகள் உருவாக்கப்பட்டன என்றும் திரு லீ கூறினார். எனினும், புறச்சூழ்நிலைகளைப் பொறுத்தே இவ்வாண்டின் பொருளியல் வளர்ச்சி அமையலாம் என்றார் பிரதமர் லீ. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அண்மைய வர்த்தகப் பதற்றநிலைகள் உலகப் பொருளியலில் நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார்.
"வர்த்தகமே நமது உயிர்நாடியாகத் திகழ்வதால் சூழ்நிலைகளை நாங்கள் அக்கறையுடன் கவனித்து வருகிறோம். பல்லாண்டுகாலமாக உலகப் பொரு ளியல் வளர்ச்சியை நீடித்து நிலைக்கச் செய்த அனைத்துலக வர்த்தக முறையை வர்த்தகப் போர் சீர்குலைத்துவிடும்," என்று பிரதமர் கூறியுள்ளார்.

