சிங்கப்பூர் அனைத்துலக நடுவர் மையம், தன்னுடைய புதிய தலைமை நிர்வாகியாக அலாய்சியஸ் கோ, மே 1 முதல் பொறுப்பேற்பார் என்று தெரிவித்துள்ளது. இவர், திருவாட்டி லிம் சியோக் ஹுன்னுக்கு பதிலாக பொறுப்பேற்கிறார். திருவாட்டி லிம் இந்த மையத்தின் நிர்வாக சபை உறுப்பினராகச் செயலாற்றுவார். திரு கோ, பல துறைகளிலும் சமரச பணியில் 15 ஆண்டுக்கும் அதிக காலம் அனுபவம் வாய்ந்தவர். 'அனைத்துலக நடுவர்' என்று அவருக்குச் சான்றிதழ் அளிக்கப்பட்டு இருக்கிறது. திரு கோ, வெளியுறவு அமைச்சில் சேவையாற்றி இருக்கிறார். இப்புதிய நியமனங்கள், பல கட்டமாக இடம்பெறும் புதுப்பிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக நடப்புக்கு வந்துள்ளதாக மையம் தெரிவித்துள்ளது.
அனைத்துலக நடுவர் மையத்துக்குப் புதிய தலைமை நிர்வாகி
1 mins read

