குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக சந்தேகம்: ஆடவர் கைது

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக சந்தேகம்: ஆடவர் கைது

1 mins read

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியிருக்கிறார் என்று சந்தேகிக்கப்பட்ட 28 வயது ஆடவர் ஒருவரை போலிஸ் கைதுசெய்தது. அவர், தொழிலாளர் தினத்தன்று அதிகாலை நேரத்தில் பூகிஸ் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகில் இருக்கும் புல்தரைப் பகுதியில் வாகனத்தை மோதி விட்டதாகத் தெரிகிறது.

இந்தச் சம்பவத்தைக் காட்டும் படங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டு இருந்தன. வாகனம் மோசமாக சேதம் அடைந்திருந்ததை, கேபி லாவ் என்பவர் ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய படங்கள் காட்டின. சம்பவ இடத்தில் குப்பைக்கூலங்கள் சிதறிக்கிடந்தன. அருகே குப்பைத்தொட்டி ஒன்று தலைக்குப்புறக் கிடந்தது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய சந்தேகத்தின் பேரில் ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாகவும் விசாரணை தொடர்வதாகவும் போலிஸ் தெரிவித்துள்ளது.