இங் சீ மெங்: ஊழியர்களின் கருத்து கேட்டு எதிர்கால இலக்குகளை வகுப்பேன்

இங் சீ மெங்: ஊழியர்களின் கருத்து கேட்டு எதிர்கால இலக்குகளை வகுப்பேன்

1 mins read
051c12b9-5469-400a-8dcf-51a7f580f061
-

ஊழியர்களின் கருத்துகளுக்குச் செவிமடுக்கப்போவதாக தொழிற் சங்க இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கும் இங் சீ மெங் தெரிவித்து இருக்கிறார். டௌன்டவுன் ஈஸ்ட்டில் நேற்று நடந்த மே தினப் பேரணியில் திரு இங் உரையாற்றினார். "வேலை பார்க்கும் மக்களுக் காக சிலவற்றைச் சாதிக்கவேண் டும் என்று திட்டம் வைத்திருக் கிறேன். முத்தரப்புப் பங்காளி களோடும் தொழிற்சங்க இயக்கத் தலைவர்களோடும் சேர்ந்து பாடு பட்டு உங்களுடன் கைகோத்து நடந்து, உங்களுக்குச் செவி சாய்த்து தெள்ளத்தெளிவான எதிர்கால இலக்கை வகுப்பேன்," என்று திரு இங் குறிப்பிட்டார்.

ஊழியர்களுடன் அதிக கலந் துரையாடல் கூட்டங்களை நடத்தி அவர்களுடைய தேவைகளையும் அவர்கள் எதிர்நோக்கும் சவால் களையும் சிறந்த முறையில் தெரிந்துகொண்டு அவற்றை நிறைவேற்ற பாடுபடப்போவதாக வும் திரு இங் தெரிவித்தார். சிங்கப்பூரில் 23 தொழில்துறை களுக்கான வளர்ச்சித் திட்டங் களை வரையறை செய்கின்ற '23 தொழில்துறை உருமாற்ற திட்டங் கள்' பற்றி ஊழியர்கள் தெள்ளத் தெளிவாக புரிந்துகொள்ள உதவப் போவதாகவும் திரு இங் கூறினார். "முன்னேற்றத்தைக் கிள்ளுக் கீரையாகக் கருதக்கூடாது. சிங் கப்பூர், பொருளியல் முன்னேற்றத் தைச் சாதித்து தன் மக்களுக்குச் சிறந்த வேலை வாய்ப்புகளைக் கட்டிக்காத்து வருகிறது.

மே தினப் பேரணிக் கூட்டத்தின்போது அதில் கலந்துகொண்ட தொழிற்சங்க இயக்கத்தாருடன் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் துணை தலைமைச் செயலாளர் இங் சீ மெங் படம் எடுத்துக்கொண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்