தொழிற்சங்க உறுப்பினர்களுக்குப் பயிற்சி மானியம் வழங்கி உதவும் நிதியில் $200 மில்லியன் தொகையைச் சேர்க்கவேண்டும் என்று தொழிற்சங்க இயக்கம் நிர்ணயித்து இருந்த இலக்கு நிறைவேறி இருக்கிறது. அந்த நிதிக்காக $200 மில்லியன் திரண்டு இருக்கிறது என்று தேசிய தொழிற்சங்கக் காங் கிரசின் தலைமைச் செயலாளர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க இயக்கத்தின் கல்வி, பயிற்சி நிதிக்கு கூடுதல் நிதி ஆதரவாக அரசாங்கம் ஒரு வெள்ளிக்கு மூன்று வெள்ளி வழங்கும் என்று 2016ல் பிரதமர் லீ சியன் லூங் அறிவித்தார். இந்த ஏற்பாட்டின்படி, கூடிய பட்சமாக அரசாங்கம் $150 மில்லியன் தரும் என்று திரு லீ குறிப்பிட்டிருந்தார். அந்த அறி விப்பு வெளியாகி இரண்டாண்டு களில் தொழிலாளர் இயக்கம் நிதி ஆதரவுகள் மூலம் $50 மில்லி யனைத் திரட்டி இருக்கிறது. அர சாங்கத்திடமிருந்து $150 மில்லி யனைப் பெற்று இருக்கிறது என் றார் திரு சான்.
தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளர் சான் சுன் சிங், மே தினப் பேரணியில் தொடக்க உரையாற்றுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

