மதுரை: கிழக்கு ஆவணி மூலவீதியில் உள்ள இந்தியன் வங்கியின் கிளை அலுவலகத்தில் பட்டப்பகலில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அக்கிளையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு நேற்று முன்தினம் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதற்காக அனைவரும் நான்காவது மாடிக்குச் சென்றிருந்தனர். காசாளர் சக்திகணேஷும் பணம் வைக்கப்பட்டிருக்கும் தடுப்புப் பகுதிக்கு பூட்டு போட்டுச் சென்றுவிட, அதன் பிறகு அங்கே வந்த மர்ம நபர் ஒருவர், மிக சாமர்த்தியமாகச் செயல்பட்டு, தடுப்புப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்டமாக கிளை ஊழியர்கள் யாருக்கேனும் இக்கொள்ளையில் தொடர்புள்ளதாக எனப் போலிசார் விசாரித்து வருகின்றனர்.
வங்கியில் நுழைந்து ரூ.10 லட்சம் கொள்ளை; பட்டப்பகலில் துணிகரம்
1 mins read

