மின்னணு பணப் பட்டுவாடா: மாபெரும் கட்டமைப்பு திட்டம்

மின்னணு பணப் பட்டுவாடா: மாபெரும் கட்டமைப்பு திட்டம்

1 mins read
c051859e-887e-40dc-bd1d-d61b74aff33f
-

சிங்டெல் நிறுவனமும் கணினி விளையாட்டுக் கருவிகளைத் தயாரிக்கும் ரேசர் நிறுவனமும் கூட் டுத் தொழிலில் ஈடுபட இணங்கி இருக்கின்றன. அதன்மூலம் தென்கிழக்கு ஆசியாவில் ஆகப்பெரிய மின்னணு பணப்பட்டுவாடா கட்ட மைப்பை உருவாக்கலாம் என்று இந்த நிறுவனங்கள் நம்புகின்றன. இந்த இரு நிறுவனங்களும் தங்களுடைய மின்னணு பணப்பட்டுவாடா முறைகளைச் சேர்த்து ஒன்றோடு ஒன்று சேர்ந்து செயல் படக்கூடிய கட்டமைப்பை உரு வாக்க திட்டமிடுகின்றன. இந்த ஏற்பாட்டு முறையின்படி ஒரு முறையிலிருந்து மற்றொரு முறைக்குப் பணத்தைப் பற்று வைக்கமுடியும். நாடு முழுவதும் ரொக்கமற்ற பட்டுவாடா முறையை நடைமுறைக்குக் கொண்டுவரு வதற்கான ஒரு யோசனையை ரேசர் நிறுவனம் சென்ற ஆண்டு பிரதமரிடம் தாக்கல் செய்தது.

மின்னணு விளையாட்டுகளுக்குக் கூட்டாக ஏற்பாடு செய்யலாம் என்றும் இந்த இரண்டு நிறுவனங்களும் திட்டமிடுகின்றன. சிங்டெல் நிறுவனம் தாய்லாந்து, இந்தோனீசியா, இந்தியா உட்பட இந்த வட்டாரத்தில் 680 மில்லியனுக்கும் மேற்பட்ட கையடக்கச் சாதன சந்தாதாரர்களைக் கொண் டிருக்கிறது. இவர்களை இலக்காக வைத்து இந்தக் கூட்டுத்திட்டம் இடம்பெறுகிறது. இக்கூட்டுத் தொழிலுக்கான புரிந்துணர்வுக் குறிப்பு நேற்று கையெழுத்திடப்பட்டது. அதில் உரையாற்றிய ரேசர் நிறுவனத் தலைவர் டான் மின் லியாங், இந்த வட்டாரம் முழுவதும் மின்னணு விளையாட்டுகளையும் மின்னணுப் பணப்பட்டுவாடாக்களையும், ஒன் றாகச் சேர்ந்து தலைமை தாங்கி வேகப்படுத்துவதற்கு எங்களுக்கு இதன் மூலம் வாய்ப்பு கிடைத் திருக்கிறது என்று கூறினார்.