ப. பாலசுப்பிரமணியம்
உதவி என்று வரும்போது சிங்கப்பூ ருக்கு அப்பால் வெளிநாடுகளுக் கும் சென்று உதவிக்கரம் நீட்டி வரும் சிங்கப்பூர் பொது மருத்துவ மனை மருத்துவர் டாக்டர் ந. காயத்திரி தேவிக்கு இவ்வாண்டின் சுகாதார மனிதாபிமான விருது கிடைத்து உள்ளது. 15வது முறையாக வழங்கப்படும் இவ்விருதுகள் தங்கள் பணிக்கு அப்பால் பொதுநலப் பண்பில் அதிக அக்கறை செலுத்தும் சுகா தார ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கிறது. விருது பெற்ற 73 தனிநபர் களில் மருத்துவமனையின் அவசர நிலை பிரிவில் பணியாற்றும் 34 வயது காயத்திரியும் ஒருவர்.
லண்டனின் செயிண்ட் ஜார் ஜஸ் பல்கலைக்கழகத்தில் பயிலும் போதே இவருக்குப் போதிய மருத் துவ வசதிகள் இல்லாத நாடு களுக்குச் சென்று உதவிபுரிய வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் மாணவர் பருவத்தில் அதற்கெல்லாம் அதிக செலவா குமே என்ற ஐயமும் இருந்தது. மருத்துவப் படிப்பை முடித்து விட்டு, சிங்கப்பூருக்குத் திரும்பி வந்து பணியாற்றத் தொடங்கிய போது அதற்கான வாய்ப்பு வந்தது. பணியிலிருந்து இரண்டு மாத ஊதியம் இல்லாத விடுப்பு எடுத்துக்கொண்டு நேப்பாளத்தின் கிராமப் பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள நிலையை ஆராய்ந்தார்.
எவரெஸ்ட் மலைக்குப் போகும் வழியில் அமைந்துள்ள கிராம மருந்தகங்களில் போதிய மருத் துவச் சாதனங்கள் இல்லை. சுகா தார ஊழியர்களுக்குப் போதுமான பயிற்சி இல்லை போன்ற நிலவரங் கள் டாக்டர் காயத்திரியின் கவ னத்தை ஈர்த்தன. அங்குள்ள ஒரு சராசரி கிராமத் திலிருந்து மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தால் நான்கு நாட்கள் வரை நடையாகச் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்ததால் டாக்டர் காயத்திரியும் அவரது மருத்துவக் குழுவினரும் மருந் தகச் சேவையை மேம்படுத்துவது முக்கியம் என்று நினைத்து செய லில் இறங்கினர்.
டாக்டர் காயத்திரி (நடுவில்) கடந்த ஆண்டு நேப்பாளத்திலுள்ள 'பங்' கிராமத்திற்குச் சென்றிருந்தபோது, அங்குள்ள கிராமவாசி களிடமிருந்து குழந்தைப்பேறு தொடர்பில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார். படம்: டாக்டர் காயத்திரி

