சிங்கப்பூரில் சென்ற ஆண்டு போலிசார் தீவு முழுவதும் மேற் கொண்ட மூன்று நாள் நடவடிக் கையின் விளைவாக பிடிபட்ட ஆயுதமேந்திய கொள்ளையர் ஒரு வருக்கு நேற்று கிட்டத்தட்ட ஐந் தாண்டு சிறைத்தண்டனை விதிக் கப்பட்டது. ஹாசிம் ஹம்சா, 58, என்ற அந்தச் சிங்கப்பூரர் வயது காரண மாக பிரம்படியிலிருந்து தப்பினார். அவர் போதைப்பொருள் தொடர் பான குற்றச்சாட்டுகளின் பேரில் ஏற்கெனவே குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர். சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி உபி அவென்யூ 1ல் இருக்கும் வெஸ்டர்ன் யூனியன் நிதிச் சேவை கிளையில் 15 செ.மீ. ரம்பம் ஒன்றைக் காட்டி அங்கிருந்த ஊழியர் ஒருவரை மிரட்டி $650 பணத்தை அவர் கொள்ளையடித்துச் சென்றார்.
ஹாசிம்மை பிடிக்க போலிசார் பிரத்தியேக படச்சாதனங்களை 1,000 மணி நேரத்திற்கும் அதிக நேரம் அலசி ஆராய்ந்தனர். ஆயு தத்துடன் கொள்ளையடித்ததாகக் கூறும் குற்றச்சாட்டையும் கட்டுப் படுத்தப்பட்ட போதைப் பொருளை வைத்திருந்ததாகக் கூறும் குற்றச் சாட்டையும் ஹாசிம் குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஹாசிம் 2014ல் சிறையி லிருந்து விடுவிக்கப்பட்டபின் அன்றாட வாழ்க்கையில் போராடி னார். பாரத்தைத் தூக்கிவைக்கும் சிறு வாகனத்தை ஓட்டியும் துப் புரவு வேலையைச் செய்தும் காலம் கழித்து வந்த அவர், பழைய பொருட்களை விற்று காசாக்கி யும் வந்தார்.
வெஸ்டர்ன் யூனியன் கிளையில் கொள்ளை அடித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஹாசிம் ஹம்சா (நடு) 2017 ஆகஸ்ட் 7ஆம் தேதி உபி அவென்யூ1ல் சம்பவம் நடந்த கிளைக்கு கொண்டு செல்லப்பட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

