விரைவுச்சாலையில் காருடன் விபத்து: மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் காயம்

விரைவுச்சாலையில் காருடன் விபத்து: மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் காயம்

1 mins read
1a58fc04-1711-452f-a1f4-966e07ecd354
-

மத்திய விரைவுச்சாலையில் செவ்வாய்க்கிழமையன்று கார் ஒன்றுடன் விபத்தில் சிக்கிய 22 வயது மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் ஒருவரும் காயம் ஏற்பட்டது. சிலேத்தார் வெஸ்ட் லிங்க் துணைச் சாலையைக் கடந்து மோட்டார்சைக்கிளில் அவர் சென்றுகொண்டிருந்தபோது திடீரென்று ஒரு கார் அவரை நோக்கி திரும்பியதையடுத்து விபத்து நிகழ்ந்தது. சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் நிகழ்ந்த அந்த விபத்து பற்றி மாலை 5.13 மணிக்குச் செய்தி கிடைத்ததாக போலிஸ் குறிப்பிட்டது.

காயம் அடைந்த மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக போலிஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார். விபத்து நிகழ்ந்ததையடுத்து மோட்டார்சைக்கிளோட்டி தன்னுடைய வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டார் என்பது சாலை பாதுகாப்பு ஃபேஸ்புக் தளத்தில் (Roads.sg) பதிவேற்றப்பட்ட காணொளி மூலம் தெரிந்தது. போலிஸ் விசாரணை நடந்துவருகிறது.