உலு பாண்டான் ஆலைக்கு உலக விருது

உலு பாண்டான் ஆலைக்கு உலக விருது

1 mins read
12d10577-acde-407e-b4e5-0827238f8de2
-

உலு பாண்டானில் செயல்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை சென்ற ஆண்டுதான் செயல்படத் தொடங்கியது. இருந் தாலும் அது 2018 உலக தண்ணீர் விருதுகளில் ஒரு விருதை வென்று இருக்கிறது. வருடாந்திர தண்ணீர்/ கழிவுநீர் திட்ட விருது என்ற விருதை அந்த ஆலை பாரிஸ் நகரில் பெற்றுக்கொண்டது. புதிய நடைமுறைகளைக் கையாளுவதற்காக அந்த ஆலைக்கு இந்த விருது கொடுக்கப்பட்டு இருக்கிறது. உலு பாண்டான் ஆலை குறைவான எரிசக்தியையும் குறைவான ஊழியர்களையும் குறைந்த பரப்பளவு உள்ள நிலத்தையும் பயன்படுத்துகிறது. இந்த விவரங்களை பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்று அறிவித்தது. கழிவுநீரைச் சுத்தப்படுத்துவதற்கான அதிநவீன தொழில்நுட்பங்களைப் பரிசோதித்துப் பார்ப்பதற்காக அந்த ஆலை அமைக்கப்பட்டது. இடத்தைச் சிக்கனமாக பயன்படுத்தும் தொட்டிகள், எரிசக்தியைச் சிக்கனமாக பயன்படுத்தும் முறைகள், தானியக்கக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் அங்கு இருக்கின்றன.