திறன் மேம்பாட்டிற்கு அடித்தளமிட்ட ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயில்

திறன் மேம்பாட்டிற்கு அடித்தளமிட்ட ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயில்

1 mins read
9936df16-d6a0-41ee-87e6-7e348b1ab6c0
-

மூத்த பொறியாளராக 2001ஆம் ஆண்டு முதல் வேலை செய்து ஓய்வுபெற்ற 71 வயது திரு நவரத்னம் கருணாகரன் பின்னர் தனது நேரத்தை தொண்டூழியப் பணிகளுக்காக அர்ப்பணித்தார். வேலை செய்து கொண்டிருக்கும் போதே ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயிலில் தொண்டு செய்து வந்த திரு கருணா, ஓய்வுபெற்றபின்னர் தனது முழுநேரத்தையும் அந்தக் கோயில் பணிகளுக்காக ஒதுக்கி உள்ளார். இன்று அந்தக் கோயிலின் தலைவர் என்ற முறையில் கோவிலின் சமூகத் திட்டங்களை நிர்வகித்து வருகிறார்.

அதன் ஓர் அங்கமாக சமூகத்தில் அனைவரும் திறன் மேம்பாட்டை அரவணைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றத்துடன் இணைந்து 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அட்வைஸ் @ நார்த் வெஸ்ட்' எனும் திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு அவர் ஏற்பாடு செய்தார். சென்ற மாதம் 28ஆம் தேதி நடந்த இந்தப் பயிலரங்கின் மூலம் எதிர்காலப் பொருளியலுக்கு மக்கள் தயாராக இருக்கவேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வைப் பெற்றதோடு வாழ்நாள் கற்றலின் முக்கியத்துவம் குறித்தும் பங்கேற்பாளர்கள் கற்றுக்கொண் டனர். ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயிலின் செயலவை உறுப்பி னர்கள் உட்பட இந்திய சமூகத் தைச் சேர்ந்த ஏறத்தாழ 60 பேர் அந்தத் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கில் கலந்துகொண்டனர்.

பயிலரங்கில் கலந்துகொண்ட (வலமிருந்து) திரு நவரத்னம் கருணாகரன், திருமதி சஞ்சீவன் பகீரதி, திருமதி நித்யா. படம்: வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம்