அங் மோ கியோவில் விபத்து: பெண் பயணி காயம்

1 mins read
58d0444e-18e6-457d-9ae0-375078daae9c
-

அங் மோ கியோ வட்டாரத்தில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்த விபத்தில் 30 வயது பெண் பயணி ஒருவர் காயமுற்றார். அவர் பயணம் செய்துகொண்டிருந்த டாக்சி அங் மோ கியோ அவென்யூ 5க்கும் அவென்யூ 6க்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் இன்னொரு வாகனம் மீது மோதியது. விபத்து குறித்து இரவு 11.40 மணி அளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக போலிசார் கூறினர். விபத்தில் சிக்கி காயமடைந்த பெண் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.