வார இறுதிக்குள் ஊபர் நிறுத்தம்; தொடரும் விசாரணை

வார இறுதிக்குள் ஊபர் நிறுத்தம்; தொடரும் விசாரணை

1 mins read
aefc97b2-24aa-4c19-a20f-1fc73fecd182
-

ஊபர் செயலி இந்த வாரயிறுதிக்குப் பின்னர் நிறுத்தப்படும். அமெரிக் காவைச் சேர்ந்த அந்நிறுவனம், சிங்கப்பூரில் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது. இடைக்கால நடவடிக்கை களின்படி, மே 7க்குப் பிறகு ஊபர் தனது சேவையை நீட்டிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித் துள்ளது. கடந்த மார்ச் மாதம் ஊபர், தனது வட்டார வர்த்தகத்தை கிராப்பிடம் விற்றதிலிருந்து ஊபர் செயலி தொடர்ந்து இயங்க ஆணையம் இரண்டு முறை கட்டளையிட்டது.

ஊபர் சேவையிலிருந்து கிராப்புக்கு மாறுவதற்கு ஓட்டுநர் களுக்கும் பயணிகளுக்கும் வசதி கொடுப்பதே அந்த நீட்டிப்பின் நோக்கம் என்று ஆணையம் தெரிவித்தது. இருந்தபோதும், நிறுத்தத்தை அனுமதிப்பதால் கிராப் ஊபர் இணைப்பை ஆதரிப்பதாக ஆகிவிடாது என்று ஆணையம் திட்டவட்டமாகக் கூறியது. அந்த இணைப்பை இன்னும் விசாரித்து வருவதாக ஆணையம் கூறியது. "மே 7ஆம் தேதிக்குள் அந்த விசாரணை நிறைவடையாது. இரு நிறுவனங்களிடமிருந்தும் தகவல் தொடர்ந்து திரட்டப்பட்டு வரும்," என்று ஆணையப் பேச்சாளர் தெரிவித்தார். இந்நிலையில், கிராப் ஊபரின் விவரங்களைத் தெரிந்துகொள் வதற்கும், ஓட்டுநர்களுடனான பிரத்யேக ஏற்பாடுகளுக்கும் அனுமதியில்லை என்றது ஆணை யம். இடைக்கால நடவடிக்கைகள் இன்னும் நடப்பில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.