காப்பிக்கடையில் வன்முறையில் இறங்கிய மூன்று வாடிக்கையாளர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. $28 விலைப்பட்டியலுக்கான விவரத்தை காப்பிக்கடை ஊழியரால் கொடுக்க முடியாத நிலையில் அந்த மூவரும் அங்கிருந்த கிண்ணங்களையும் நாற்காலிகளையும் எறிந்து அமளி செய்தனர். இதனால் அந்தக் காப்பிக்கடையில் உள்ள உணவுக்கடைக்கு $10,000 பெறுமானமுள்ள நட்டம் ஏற்பட்டது. சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 47 வயது டான் சுங் மெங்குக்கும் 49 வயது ஆங் சிம் போவுக்கும் தலா ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுடன் வன்முறையில் இறங்கிய 41 வயது பாங் பெய் பெய்யுக்கு நான்கு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
காப்பிக்கடையில் வன்முறை: மூவருக்குச் சிறைத் தண்டனை
1 mins read
-

