'கிளப்'களில் குறைக்கப்படும் சூதாட்ட இயந்திரங்கள்

'கிளப்'களில் குறைக்கப்படும் சூதாட்ட இயந்திரங்கள்

1 mins read
d347e902-c9ff-44f7-82ab-c2d5799179d7
-

சிங்கப்பூரில் சூதாட்டத்திற்கு எதிரான விதிமுறைகளை அதிகாரிகள் கடுமையாக்கி வரும் வேளை யில் 'கிளப்'களில் சூதாட்ட இயந்திரங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகின்றன. தற்போது 42 'கிளப்'களில் மட்டுமே சூதாட்ட இயந்திரங்கள் இயங்கி வரு கின்றன. கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் அந்த எண்ணிக்கை 61ஆக இருந்தது. ஏழு 'கிளப்' கள் சூதாட்ட இயந்திரங்களுக்கான உரிமம் காலாவதியானபோது அவற்றைப் புதுப்பிக்கவில்லை என்று உள்துறை அமைச்சு நேற்று வெளியிட்ட புள்ளிவிவரம் வாயிலாக தெரிய வந்துள்ளது. சூதாட்டத்தின் அபாயங்களைக் குறைக்கும் நோக்கில் அமைச்சு, சூதாட்ட இயந்திரங்கள் தொடர் பில் புதிய விதிமுறைகளைக் கடந் தாண்டு அறிமுகம் செய்தது.

உதாரணத்திற்கு, சூதாட்ட இயந்திரங்களைப் பயன்படுத்து வோர், 21 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும். அவர்கள் அந்த இயந்திரம் உள்ள 'கிளப்'பில் குறைந்தது ஓர் ஆண்டுக்கு உறுப்பினராக இருக்க வேண்டும். அவர்கள் சூதாடுவதற்கு வேறு யாரையும் உடன் அழைத்துச் செல்லக்கூடாது. இயந்திரங்களின் திறப்பு, அடைப்பு நேரங்களிலும் அவற் றுக்கான விளம்பரங்களிலும் கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும், தானியக்க வங்கி இயந்திர அட்டைகள், கடன்பற்று அட்டைகள், மின்னியல் பணமாற்ற வசதிகள் ஆகியவையும் தடை செய்யப்பட்டுள்ளன.