அறிவுத்திறன் குறைபாடு கொண்ட பெரியவர்களுக்காகப் புலன்சார்ந்த பயிற்சிக்கூடம் அமைக்கப் பட்டுள்ளது. இந்தச் சிறப்புப் பயிற்சிக் கூடத்தை சிங்கப்பூர் அறிவுத்திறன் குறைபாடு கொண்டோருக்கான இயக்கம் (மைன்ஸ்) அமைத் துள்ளது. இந்தப் பயிற்சிக்கூடத்தில் அளிக்கப்படும் சிகிச்சைமுறை, அறிவுத்திறன் கொண்ட பெரிய வர்களுக்குத் தங்கள் சுற்றுச் சூழலுடன் ஒத்துப்போக உதவி செய்யும். புதிய பயிற்சிக்கூடம் லோரோங் நபிரியில் அமைந்துள்ளது. 35 சதுர மீட்டர் நிலப்பரப்பில் அமைக் கப்பட்டுள்ள பயிற்சிக்கூடத்தில் அறிவுத்திறன் குறைபாடு கொண்டோருக்கு ஏதுவான பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
மைன்ஸ் இயக்கத்தின் ஒன்பது மையங்களைச் சேர்ந்த அறிவுத் திறன் குறைபாடு கொண்ட 400 பெரியவர்களுக்காகப் புதிய பயிற்சிக்கூடம் திறந்துவிடப் பட்டுள்ளது. அறிவுத்திறன் குறைபாடு கொண்டவர்களுக்குப் புலன் சார்ந்த தகவல்களைப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. புதிய பயிற்சிக்கூடத்தில் உள்ள சிறப்பு வசதிகளைப் பயன்படுத்தும் அறிவுத்திறன் குறைபாடு கொண்ட இருவர், அவர்களுக்கு உதவி செய்யும் துறைசார் சிகிச்சைமுறை குழுவின் தலைவி திருவாட்டி சிவசங்கரி (வலமிருந்து இரண்டாவது), சிகிச்சைமுறை உதவியாளர் திருவாட்டி மேரிகவி (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

