சிங்கப்பூர்: வங்கி விவரங்களைப் பெற போலி மின்னஞ்சல் சூழ்ச்சி

சிங்கப்பூர்: வங்கி விவரங்களைப் பெற போலி மின்னஞ்சல் சூழ்ச்சி

1 mins read

வங்கிக் கணக்குகள் தொடர்பான ரகசிய விவரங்களைத் தெரிவிக் கும்படி கேட்டு வரும் மின்னஞ்சல் கள் குறித்து மிகவும் எச்சரிக்கை யாக இருந்துகொள்ளும்படி சிங்கப்பூர் நாணய ஆணையம் வாடிக்கையாளர்களுக்கு ஆலோ சனை கூறியிருக்கிறது. அத்தகைய மின்னஞ்சல் களைக் கையாளும்போது நூற் றுக்கு நூறு விழிப்புடன் இருக்கு மாறு அறிக்கை ஒன்றில் ஆணை யம் பயனீட்டாளர்களை நேற்று கேட்டுக்கொண்டது. இணையம் மூலம் வாடிக்கை யாளர்களின் ரகசிய விவரங் களைச் சட்டவிரோதமான முறை யில் பெறுவதற்கான முயற்சிகள் கடந்த வாரத்தில் அதிகரித்து இருப்பதை ஆணையம் சுட்டிக் காட்டி இருக்கிறது.