முஸ்லிம்கள் நோன்பு இருக்கும் ரமலான் மாதத்தை வரவேற்கும் வகையில் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (மூயிஸ்) 'டச் ஆஃப் ரமடான்' எனும் இயக்கத்தை நேற்று தொடங்கி வைத்தது. ரமலான் மாதம் இம்மாதம் 17ஆம் தேதி தொடங்குகிறது. சக மனிதர்களுக்குக் கருணை காட்டும் உயரியப் பண்பைத் தழுவ முஸ்லிம் சமூகத்தினரை ஊக்கப் படுத்தும் நோக்கில் இந்த இயக்கம் நடத்தப்படுகிறது. குடும்பத்தை வலுப்படுத்துவது, சமுதாயம் மற்றும் சுற்றுப்புறம் மீது அக்கறை கொள்வது ஆகியவை இயக்கம் முன்வைக்கும் முக்கிய தகவல்கள்.
மூயிஸின் பொன்விழாவைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்வுகளுக்கு இவ்வாண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் மூன்று நாள் சமூக நிகழ்வும் நவம்பர் மாதத்தில் அனைத்துலக சமய மாநாடும் அடங்கும்.
மேலும் epaper.tamilmurasu.com.sg

