தனியார் வாடகை கார் மீது ஏறிக் குதித்த ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் ஆடவர் ஒருவர் செந்தோசா கேட்வேயில் முறையற்ற முறையில் நடந்துகொண்டது குறித்து தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலிசார் அந்த ஆடவரைக் கைது செய்தனர். செயிண்ட் ஜேம்ஸ் இரவு விடுதிக்கு வெளியே அந்த ஆடவர் ஓடி வந்து கார் மீது ஏறிக் குதித்தது அந்த காரில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. அந்தக் காணொளிப் பதிவை காரின் ஓட்டுநருடைய மகனான திரு அலெக்ஸ் கோ, ஃபேஸ்புக் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தார். epaper.tamilmurasu.com.sg
தனியார் வாடகை கார் மீது ஏறிக் குதித்த ஆடவர் கைது
1 mins read

