செந்தோசா தீவுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் காணாமல் போன சிங்கப்பூர் முக்குளிப்பாளரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் கடற்துறை, துறைமுக ஆணையம் நேற்று தெரிவித்தது. அந்த முக்குளிப்பாளர் கடலில் காணாமல் போனதாக நேற்று முன்தினம் பிற்பகல் 2.40 மணிக்குத் தகவல் கிடைத்தது என அதிகாரிகள் கூறினர். செந்தோசாவுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் நங்கூரமிட்டுள்ள கப்பலுக்காகக் கடலுக்கு அடியில் பணி மேற்கொண்டிருந்தபோது அந்த முக்குளிப்பாளர் காணாமல் போனதாக தெரிய வந்துள்ளது. epaper.tamilmurasu.com.sg
கடலில் காணாமல் போன சிங்கப்பூர் முக்குளிப்பாளர்; தேடுதல் தொடர்கிறது
1 mins read

