நிதித் துறையில் செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்ள பல அமைப்புகளின் கூட்டு முயற்சி

1 mins read

செயற்கை நுண்ணறிவை ஏற்றுக் கொண்டு, நிதித் துறையின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் முயற்சியில் சிங்கப்பூர் நாணய ஆணையம் இதர அமைப்புகளுடன் இணைந்து செயல்படவிருக்கிறது. பொருளியல் வளர்ச்சிக் கழகம், தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், வங்கி மற்றும் நிதித் துறை கழகம் ஆகியவை சிங்கப் பூர் நாணய ஆணையத்துடன் சேர்ந்து புதிய செயற்கை நுண்ண றிவு தொழில்நுட்பத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். மேலும் நிதித்துறைக்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த பொருட்கள், சேவைகள், செயல் முறைகள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளும். இந்த அமைப்புகளின் முயற்சி கள் மூன்று முக்கிய நோக்கங்க ளைக் கொண்டிருக்கும்.