கண்களுக்குக் குளிர்ச்சியான, பசுமையான இடங்களை ஒருங் கிணைத்து அவற்றை உரு மாற்றுவதன் மூலம் அனைவரும் வாழ்வதற்குரிய, நீடித்து நிலைத் திருக்கக்கூடிய சிங்கப்பூரை நிர் மாணிக்க தன் பங்கை ஆற்றி வருவதாக சுற்றுப்புற, நீர்வள அமைச்சு தெரிவித்துள்ளது. "துடிப்புமிகுந்த, அழகான, தூய்மையான நீர்' (ஏபிசி) திட் டத்தின் மூலம் வடிகால்கள், கால்வாய்கள், நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றை அழகான நதிகள், நீர் ஊற்றுகள், ஏரிகள் போன்ற வையாக நாங்கள் தொடர்ந்து உருமாற்ற உள்ளோம்," என தமது அமைச்சின் பிற்சேர்க்கை யில் கூறினார் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி.
அடுத்த ஒருசில ஆண்டு களில் ஜூரோங் லேக், சுங்கை வாம்போ உள்ளிட்ட இடங்களில் 'ஏபிசி' நீர்த் திட்டங்கள் நிறைவு பெறும். வெள்ளநீரை நிர்வகிக்கும் முறைகளை மேம்படுத்துவது, கடல்நீரைக் குடிநீராக்கும் இன் னும் கூடுதலான ஆலைகளின் உதவியுடன் நீர் விநியோகத்தை விரிவுபடுத்துவது உட்பட பருவ நிலை மாற்றத்தினால் பாதிக்கப் படாத உள்கட்டமைப்புகளில் அமைச்சு முதலீடு செய்யும்.

