சிங்கப்பூருக்கு "அதிமுக்கியமான" ஒன்றாக இணைப்புத்தன்மை நீடித்து வருவதால், வட்டார நாடு களோடும் உலக நாடுகளோடும் சிங்கப்பூருக்குள்ள இணைப்புகளை மேன்மேலும் மேம்படுத்த போக்கு வரத்து அமைச்சு முயற்சி எடுக்கும் என போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று கூறினார். சீரிய இணைப்புப் பொருளிய லுக்குத் துணைபுரிந்து, தரமான வேலைகளை உருவாக்குவது, சிங்கப்பூரர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் என்று அதிபர் உரைக்கான தமது அமைச் சின் பிற்சேர்க்கையில் திரு கோ கூறினார்.
அதிபர் திருவாட்டி ஹலிமா யாக்கோப் தமது உரையில் எடுத் துரைத்த ஐந்து முக்கிய இலக்கு களில் ஒன்றுக்குப் போக்குவரத்து அமைச்சின் பிற்சேர்க்கை விளக்க மளித்தது. நன்கு இணைக்கப்பட்ட, உல கத் தரமிக்க நகரை சிங்கப் பூரர்களுக்காக உருவாக்குவதே அந்த இலக்கு.
சொத்துப் புதுப்பிப்பு, தீவிரமான பராமரிப்பு ஆகியவை மூலம் ரயில் நம்பகத்தன்மையை வலுப்படுத்துவது போக்குவரத்து அமைச்சின் இலக்குகளில் ஒன்று. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

