சிங்கப்பூரர்களுக்கு இப்போது இருப்பதைவிட இன்னும் சிறந்த வீடுகளைக் கட்ட தேசிய வளர்ச்சி அமைச்சு உறுதிபூண்டு இருக் கிறது. இப்போதைய தலைமுறைக்கும் எதிர்காலத் தலைமுறைக்கும் அத்தகைய வீடுகளை உருவாக்குவ தற்கான திட்டங்களை தேசிய வளர்ச்சி அமைச்சு தெரிவித்து இருக்கிறது. அதிபர் ஹலிமா யாக்கோப் நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை உரையாற்றினார்.
தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், அதிபர் உரைக்கான பிற்சேர்க்கையில் தன் னுடைய அமைச்சின் இலக்குக ளைப் பட்டியலிட்டு இருக்கிறார். அனைத்து வயது பிரிவினரை யும் அனைத்து வகையான ஆற் றலைக் கொண்டோரையும் உள் ளடக்கும் வகையில் சிறந்த நகரை உருவாக்குவதற்கான திட்டங் களை அமைச்சர் வோங் மறு உறுதிப்படுத்தினார். முதியோர், எளிதில் பாதிக் கக்கூடிய சிங்கப்பூரர்களின் வீட் டுத் தேவைகளை நிறைவேற்றுவதும் இவற்றில் அடங்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

